மகிழம்பூ முறுக்கு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 400 கிராம்
2. வறுகடலை (பொட்டுக்கடலை) - 100 கிராம்
3. சீரகம் - 20 கிராம்
4. வெண்ணெய் - சிறிது
5. உப்பு- தேவையான அளவு
6. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. புழுங்கல் அரிசியை ஊறவைத்து தேவையான உப்பு, நீர் சேர்த்து மாவைக் கெட்டியாக அரைக்கவும்.
2. வறுகடலையை மாவு போல் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
3. அரைத்து வைத்த அரிசி மாவுடன், வறுகடலை மாவு, சீரகம் சேர்த்துக் கையில் வெண்ணெய் தேய்த்துப் பிசையவும்.
4. மாவை முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்து வைத்த முறுக்குகளைப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.