தேங்காய் பர்பி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் – 2 கப்
2. சர்க்கரை – 2 கப்
3. நெய் – 1 தேக்கரண்டி
4. ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
5. பால் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
2. அதில் பால் விட்டு பொங்கி வரும் போது, மேலாக இருக்கும் கசடை எடுக்கவும்.
3. பின் சர்க்கரை சேர்த்துக் கொதித்து கம்பிப் பதம் வந்தவுடன் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும்.
4. கொஞ்சம் கெட்டியானதும் நெய், ஏலக்காய் தூள் போட்டு சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
5. ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.
குறிப்பு:தேங்காய் பர்பி வெள்ளையாக இருக்கும். நிறம் வேண்டுபவர்கள் தேவையான நிறத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.