பொரிகடலை உருண்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 1/2 கப்
2. பொரிகடலை -1/2 கப்
3. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
4. நிலக்கடலை - 1/2 கப்
5. வெல்லம் - 3/4 கப்
6. முந்திரிப்பருப்பு - 5 எண்ணம்
7. உலர்ந்த திராட்சை - 5 எண்ணம்
8. நெய் - 1/2 கப்
9. ஏலக்காய் - 4 எண்ணம்
செய்முறை:
1. ஒரு கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. அதே கடாயில் பொரிகடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக மூன்று நிமிடம் வதக்க வேண்டும்.
3. வதக்கிய கலவையை மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. அடுப்பில் வேறொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதும் கரையும்படி சூடுபடுத்தவும்.
5. பிறகு அரைத்த கடலை கலவை, நெய், அரிசி மாவு, உலர்ந்த திராட்சை போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
6. கிளறிய மாவை உருண்டையாக உருட்டி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.