கோதுமை அப்பம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 250 கிராம்
2. நாட்டுச் சர்க்கரை - 200 கிராம்
3. ஏலக்காய் - 5 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் - 1 மூடி
5. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. கோதுமை மாவுடன் பொடித்த நாட்டுச் சர்க்கரையைச் சேர்க்கவும்.
2. அத்துடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கரைக்கவும்.
3. அந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் விட்டுச் சேர்த்து பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.