உளுந்து குளோப் ஜாமூன்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உளுந்தம் பருப்பு - 200 கிராம்
2. பச்சரிசி - 50 கிராம்
3. சீனி - 400 கிராம்
4. நல்லெண்ணெய் - 250 மி.லி
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தம் பருப்பை நன்கு சுத்தம் செய்து, பச்சரிசியுடன் ஊற வைக்கவும்.
2. உளுந்தம் பருப்பை வடைக்கு ஆட்டுவது போல் ஆட்டவும். மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி ஆட்டி வைத்த மாவை குளோப்ஜாமூன் வடிவில் பொறித்து எடுக்கவும்.
4. சீனியுடன் அளவான தண்ணீர் கலந்து, பிசுபிசுவென்று பக்குவம் வரும்வரை சீனிப்பாகாகக் காய்ச்சவும்.
5. இந்த சீனிப்பாகில் பொறித்தெடுத்த குளோப்ஜாமூனைப் போடவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.