புதினா மல்லி பக்கோடா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கப்
2. அரிசி மாவு - 1/4 கப்
3. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
4. சிறிய வெங்காயம் - 20 எண்ணம்
5. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
6. கறிவேப்பிலை - சிறிதளவு
7. புதினா இலை- 25 கிராம்
8. மல்லித்தழை - 50 கிராம்
9. வெண்ணெய் - 25 கிராம்
10. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துத் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும்.
3. பிசைந்த மாவை உதிரி உதிரியாகச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.