நெய் அப்பம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 1 கப்
2. வெல்லம் – 3/4 கப்
3. தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
4. ஏலக்காய் – 1 எண்ணம்
5. சமையல் சோடா – 3 சிட்டிகை
6. உப்பு – தேவையான அளவு
7. நெய் – தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியை கழுவி 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும். தண்ணீரை வடித்துக் கெட்டியாக அரைக்கவும்.
2. வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சர்க்கரைப் பாகாக் காய்ச்சவும்.
3. சர்க்கரைப் பாகினை வடிகட்டி, அரைத்த மாவில் சேர்த்துக் கலக்கவும்.
4. தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலக்கவும்.
5. பனியாரச் சட்டியைச் சூடு செய்து, ஒவ்வொரு குழியிலும் 1/2 தேக்கரண்டி நெய் ஊற்றவும்.
6. அதில் 3/4 பங்கு மாவை ஊற்றி மிதமான தீயில், மூடி வேக விடவும்.
7. மாவு சிவந்ததும் பணியாரங்களை திருப்பவும். இரு புறமும் சிவந்ததும், எடுத்துச் சூடாக பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.