அன்னாசிப்பழக் கேசரி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ரவை -1 கப்
2. அன்னாசிப் பழம் (நறுக்கியது) - 1 கப்
3. சீனி - 1 1/4 கப்
4. ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
5. நெய் - 3 மேசைக்கரண்டி
6. வண்ணப் பொடி (மஞ்சள் நிறம்) - 1 சிட்டிகை
7. முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
8. திராட்சை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரி திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அந்த நெய்யில் நறுக்கிய அன்னாசிப் பழத் துண்டுகளைப் போட்டு இலேசாக வதக்கி எடுத்து வைக்கவும்.
3. பின்னர் அதில் மேலும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ரவையைப் போட்டு சிறிது நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும், கொதித்து வந்ததும் அதில் வண்ணப் பொடி, ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் வறுத்த அன்னாசிப்பழத்தை சேர்க்கவும், பின்னர் வறுத்த ரவையை சேர்த்துக் கரண்டியால் கிளறி விடவும்.
5. ரவை வெந்ததும் நெருப்பைக் குறைத்துக் கொள்ளவும்.
6. பின்னர் அதில் சீனியைச் சேர்த்து கட்டி சேராமல் கிளறிவிடவும்.
6. ரவையும் சீனியும் ஒன்று சேர்ந்து வந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.
7. பின்னர் அதில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.