வேர்க்கடலை முறுக்கு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வேர்க்கடலை – 1/4 கப்
2. அரிசி மாவு – 1 கப்
3. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
4. எள் – 1 தேக்கரண்டி
5. பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
6. வெண்ணெய் – 1 தேக்கரண்டி
7. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வேர்க்கடலையை மேல் தோல் நீக்கி மிக்சியில் நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.
2. பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, அரைத்த வேர்க்கடலை விழுது, மிளகாய்த்தூள், எள், பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. ஒரு வாணலியில் வெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதனையும் சேர்த்துக் கலக்கவும்.
5. பின்னர் தண்ணீர் தெளித்து, மாவாகப் பிசையவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
7. பிசைந்த மாவை முறுக்கு அச்சில் நிரப்பி சிறிய தட்டு அல்லது தட்டையான கரண்டிகளில் எண்ணெய் சிறிது தடவி முறுக்கைப் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
8. எண்ணெய் நன்கு காய்ந்தவுடன், அதில் பிழிந்து வைத்த முறுக்கினைப் போட்டு வேகவிடவும்.
7. முறுக்கு ஒரு பக்கம் வெந்தவுடன், மறுபக்கம் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.