கார்த்திகை பொரி உருண்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் பொரி - 8 கப்
2. வெல்லம் (பொடித்தது) - 2 கப்
3. வறுகடலை - 1 கப்
4. தேங்காய் - ஒரு மூடி
5. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
6. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
2. பொரியை நன்றாகப் புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும்.
3. சுத்தம் செய்த பொரி, வறுகடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
4. அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டியாகப் பாகு காய்ச்சவும்.
6. சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியேக் கெட்டியாக இருக்கும். அதைக் கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியான பதம்.
7. அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.
8. உடனே அதில் பொரியைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
9. பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.
குறிப்பு:
* உருண்டை பிடிக்க இயலவில்லையெனில், அப்படியே உதிரியாகப் பயன்படுத்தலாம்.
* அவல் பொரி கிடைக்கவில்லையெனில், நெல் பொரியைப் பயன்படுத்திச் செய்யலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.