கேரட் அல்வா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கேரட் துருவல் - 250 கிராம்
2. பால் - 1 லிட்டர்
3. சர்க்கரை - 250 கிராம்
4. நெய் - 100 கிராம்
5. முந்திரிப் பருப்பு - 50 கிராம்
6. பாதாம் பருப்பு - 25 கிராம்
7. ஏலக்காய் - சிறிது.
செய்முறை:
1. பாலை பாதியாகக் குறையும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சவும்.
2. சுண்டக் காய்ச்சிய பாலில் கேரட் துருவலைப் போட்டு வேக வைக்கவும்.
3. பின்னர் அதில் நெய், சர்க்கரை கலந்து கிளறவும்.நெய், சர்க்கரை, கேரட் மூன்றும் ஒன்று சேரும் வரை கிளறவும்.
4. சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு போன்றவைகளை இலேசாக வறுத்துச் சேர்க்கவும்.
5. கடைசியாக ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.