கவுனி அரிசி அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கவுனி அரிசி -1 கோப்பை
2. சீனி – 1 1/4 கோப்பை
3. ஏலக்காய் -3 எண்ணம்
4. நெய் – 1/2 கோப்பை
5. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
6. உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. கவுனி அரிசியை நன்கு ஊற வைத்து நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது நெய் காய வைத்து, முந்திரிப்பருப்பு. உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3. அதே வாணலியில் அரைத்த கவுனிஅரிசி விழுதுடன் 2 கோப்பை தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
4. கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
5. சிறிது சிறிதாக நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
6. நன்கு திரண்டு, உருண்டு வரும் சமயம் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
7. நெய்விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் அடுப்பை விட்டு இறக்கி ஆறவிட்டு, பின்னர் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.