கோதுமை அல்வா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சம்பா கோதுமை – 4 கப்
2. சர்க்கரை – 7 கப்
3. நெய் – 4 கப்
4. ஏலக்காய் – 6 எண்ணம்
5. முந்திரிப்பருப்பு – 10 கிராம்
6. திராட்சை – 10 கிராம்
7. பாதாம் பருப்பு – 10 கிராம்
8. பால் – 1/4 கப்
9. ஜிலேபி பவுடர் – சிறிது
செய்முறை:
1. சம்பா கோதுமையை ஒரு ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
2. அதன் பிறகு கோதுமையை நன்கு கழுவி ஆட்டுக்கல்லில் (கிரைண்டர் ) ஆட்டிப் பால் எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து பாகு காய்ச்சவும். (இரண்டு விரல்கலால் தொடும் போது கம்பிப்பதம் வர வேண்டும்)
4. பாகு காய்ந்த்தும் அதில் கோதுமைப் பாலை ஊற்றியதும் பாலையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரைகிளறுங்கள்.
5. நன்கு கெட்டியானவுடன் அதில் வண்ணத்திற்காக ஜிலேபி பவுடர் சேர்த்த சிறிது நேரத்தில் நெய்யைச் சேர்த்துக் கிளறுங்கள்.
6. அதன் பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து நமக்குப் பிடித்த வடிவில் வெட்டிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.