முந்திரிக் கொத்து
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 500 கிராம்
2. உருண்டை வெல்லம் - 300 கிராம்
3. சர்க்கரை - 50 கிராம்
4. தேங்காய் - 1
5. எள் - 1 மேசைக்கரண்டி
6. உளுந்தம்பருப்பு - 50 கிராம்
7. பச்சரிசி - 200 கிராம்
8. நல்லெண்ணெய் - 300 கிராம்.
9. ஏலக்காய்த் தூள் - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சரிசி, உளுந்தம் பருப்பைத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
2. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
4. வெல்லத்தில் மூன்றில் ஒரு பாகத்தைப் பிரித்து துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
5. மீதமுள்ள வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துச் வெல்லப் பாகு தயாரிக்கவும்.
6. பாசிப்பருப்பு மாவுடன் எள், ஏலக்காய்த் தூள், வதக்கிய தேங்காய், வெல்லப்பாகு, சீனி சேர்த்துக் கட்டியாகப் பிசையவும் .
7. பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
8. அரிசியையும், உளுந்தையும் சேர்த்து அரைத்து தோசை மாவு போல் ஆக்க வேண்டும்.
9. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயந்ததும், உருட்டி வைத்த மாவு உருண்டைகளில் மூன்று உருண்டைகளாக எடுத்து அரிசி உளுந்து மாவில் தோய்த்து எண்ணெய்யில் வேகவிடவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.