தேங்காய் ரவை பர்பி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ரவை -1 கப்
2. தேங்காய்ப் பூ - 2 கப்
3. சர்க்கரை - 2 கப்
4. முந்திரி - 10 எண்ணம்
5. நெய் - 1/4 கப்
6. ஏலக்காய் - 1 எண்ணம்
செய்முறை:
1. ரவை, தேங்காய்ப்பூ இவற்றைத் தனித்தனியாக ஒவ்வொரு ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். மேலும், சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
2. ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
3. ஒரு கெட்டியான பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். நல்ல கம்பிப்பதம் வர வேண்டும்.
4. ரவையை சிறிது சிறிதாகப் பாகில் கொட்டிக் கட்டி இல்லாமல் கிளற வேன்டும்.
5. அடுத்து, தேங்காய்ப் பூவை அதே போல் கொட்டிக் கிளறவும். தீ மிதமாக இருக்கட்டும்.
6. ஏலப் பொடியைத் தூவி இடையிடையே நெய் ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
7. கொஞ்ச நேரம் கழித்துக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
8. அதுதான் சரியான பர்பி பதம். அப்போது கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.
9. வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்து ஆற வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.