காய்கறிப் பக்கோடா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு -1 கோப்பை
2. காய்கறி சிறு துண்டுகளாக நறுக்கியது 1 கோப்பை
3. ரவை 1 -மேசைக்கரண்டி
4. மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
5. இஞ்சிபூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
6. வெங்காயம் (நறுக்கியது) -1/4 கோப்பை
7. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
8. கறிவேப்பில்லை - சிறிது
9. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. கோதுமை மாவை சிறுது வறுத்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து விடவும்.
3. காய்கறிகளை சேர்த்து தண்ணீர் கலக்காமல் நன்கு கிளறிக் கொள்ளவும்.
4. அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
5. தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவை விடத் தளர்த்தியாகவும், இட்லி மாவை விடக் கெட்டியாகவும் வைத்துக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சிறு உருண்டைகளாகப் போட்டு வேக வைக்கவும்.
7. பொன்னிறமாக வெந்ததும், எண்ணெய்யை வடித்து எடுத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.