பொட்டுக்கடலை லட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பொட்டுக்கடலை - 200 கிராம்
2. சர்க்கரை - 100 கிராம்
3. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
4. நெய் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து மிக்சியில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
2. சர்க்கரையை தனியாக மிக்சியில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
4. ஒரு டம்ளர் தண்ணீரைச் (75 மி.லி) சுட வைத்து வெந்நீராக்கவும்.
5. வெந்நீர் மற்றும் நெய்யைச் சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்துக் கெட்டியாகும் வரை நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
6. எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும்.
7. மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்து உருண்டையாக்கவும்.
குறிப்பு:
குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்து மிகுந்த லட்டு இது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.