பச்சை மிளகாய் அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மிளகாய் - 1 கப்
2. சர்க்கரை - ¼ கப்
3. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
4. பாதாம் பருப்பு - 10 எண்ணம்
5. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 10 எண்ணம்
6. சோள மாவு - 1 தேக்கரண்டி
7. நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
1. அடுப்பில் வாணலியை வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, உலர் திராட்சையைப் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
2. பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, விதைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.
3. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பச்சை மிளகாயைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
4. பின்னர், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் தண்ணீரில் இருக்கும் பச்சை மிளகாயை எடுத்து இதில் போட்டு மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதுபோன்று மூன்று முறை செய்யவும். இப்படிச் செய்வதால், மிளகாயில் உள்ள காரத்தன்மை குறையும்.
5. சூடு ஆறியதும், மிளகாயை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு மிளகாயின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
6. பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
7. அதன் பிறகு, சோளமாவைச் சிறிது தண்ணீரில் கரைத்து, பச்சை மிளகாய் கலவையில் ஊற்றி, தொடர்ந்து கிளறவும்.
8. இந்தக் கலவை நன்றாக சுருண்டு, ஓரங்களில் நெய் பிரிந்து வரும் சமயத்தில், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து இறக்கி விடவும்.
குறிப்பு:
இந்த அல்வா, இனிப்பு மற்றும் காரச் சுவை கலந்து வித்தியாசமான சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.