ஓமப்பொடி உருண்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஓமப்பொடி (காரமில்லாதது) - 1 கப்
2. பொட்டுக்கடலை - 1/4 கப்
3. தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) - 1 மேசைக்கரண்டி
4. நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
5. சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
6. நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. நெய்யில் தேங்காயை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. ஓமப்பொடி, தேங்காய், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
3. வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து உருண்டைக்கான பதத்தில் பாகு காய்ச்சவும்.
4. ஓமப்பொடி கலவையைப் பாகில் கொட்டி, சர்க்கரை தூவிக் கிளறி உருண்டை பிடிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.