பொட்டுக்கடலை முறுக்கு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு – 1 கிண்ணம்
2. பொட்டுக்கடலை மாவு – 1 கிண்ணம் (பொட்டுக்கடலையை அரைத்து மாவாகச் சலித்து எடுக்கவும்)
3. கறுப்பு எள் – 1 தேக்கரண்டி
4. ஓமம் – 1/2 தேக்கரண்டி
5. சீரகம் – 1/2 தேக்கரண்டி
6. தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
7. உப்பு – தேவையான அளவு
8. மிளகாய்த் தூள் – தேவையான அளவு
9. எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
1. அரிசி மாவை நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. அத்துடன் பொட்டுக்கடலை மாவைச் சேர்க்க வேண்டும்.
3. இரு மாவுகளுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், எள், ஓமம் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாகப் பிசறி விட வேண்டும்.
4. பிசறிய மாவுடன் சிறிது, சிறிதாகத் தண்ணீர் விட்டுச் சற்று கெட்டியாக சப்பாத்திக்கான மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5. இந்த மாவுடன் தேங்காய் எண்ணெய் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசைந்து, மாவினைப் முறுக்காகப் பிழிவதற்கு எளிதாக இருக்கும் படி சற்று இளக்கிக் கொள்ள வேண்டும்.
6. மாவு மிருதுவாக பிழியும் பதத்திற்கு வந்தவுடன், முறுக்காகப் பிழியவும். (மூன்று துளைகள் கொண்ட முள் அச்சினைப் பயன்படுத்தவும்).
7. வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணையை விட்டுச் சூடாக்கி, அதில் பிழிந்த முறுக்கு மாவினைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.