இனிப்புப் புரோட்டா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு – 2 கப்
2. பால் – 1 கப்
3. சர்க்கரை – 2 கரண்டி
4. நெய் – 2 கரண்டி
5. உப்பு – 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் – 100 கிராம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் கோதுமை மாவை எடுத்து, அதனுடன் சிறிது உப்பு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
2. பின்னர், இரண்டு கப் காய்ச்சிய பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவை, சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
3. அதன் பிறகு, பத்து நிமிடத்திற்கு இந்த மாவை, சப்பாத்தி உருட்டும் பலகையில் வைத்து நன்றாக அடித்து, மாவு மென்மையாக மாறும் வரை பிசைய வேண்டும்.
4. அதன் பின்னர் மாவை உருட்டி 20 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும். 20 நிமிடத்திற்குப் பிறகு மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
5. பின்னர் இவற்றை மெல்லியதாக உருளை வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
6. பின்னர் இவற்றின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை சக்கரம் போல சுற்றி வைக்க வேண்டும்.
7. சுருட்டி வைத்த ஒவ்வொரு துண்டுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து, சப்பாத்திப் பலகையில் வைத்து, சப்பாத்தி போல தேய்த்துக் கொள்ள வேண்டும்.
8. பின்னர் தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து அதில் லேசாக எண்ணெய் தடவி இந்த பரோட்டாவை ஒவ்வொன்றாகச் சேர்த்து தோசைக்கல்லில் வாட்டி எடுக்க வேண்டும்.
9. இரண்டு புறங்களும் நன்றாகச் சிவந்ததும் புரோட்டாவைத் தனியாக எடுத்து வைத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.