அவல் கேசரி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 2 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. கேசரி பவுடர் - 2 சிட்டிகை
4. முந்திரி - 1 மேசைக்கரண்டி
5. நெய் - 1/2 கப்
6. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் அவல், சில முந்திரிப்பருப்பைப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும்.
2. முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் ஊற்றவும்.
3. பின்னர், அதில் அவலைச் சேர்த்து வேக விடவும்.
4. நன்கு வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.
5. கேசரிப் பதம் வந்ததும், அதில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.