உருளைக்கிழங்கு முறுக்கு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 2 கப்
2. கடலை மாவு - 1 கப்
3. உருளைக் கிழங்கு - 2 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்து, அதோடு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
3. அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.
4. இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கை இதில் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
5. இந்த மாவைச் சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.