ஜாங்கிரி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 1/4 கிலோ
2. சர்க்கரை - 3/4 கிலோ
3. டால்டா - 1/2 லிட்டர்
4. தயிர் - 2 தேக்கரண்டி
5. ஆரஞ்சு பவுடர் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தயிர், ஆரஞ்சு கலர் பவுடர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
2. ஒரு கடாயில் சர்க்கரையைக் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி, பாகு இறக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றிச் சூடேற்றவும்.
4. நன்கு சூடு ஏறியதும் பிசைந்து வைத்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் ஊற்றி வைத்து, வாணலியில் வட்டமாக பிழியவும்.
5. நன்கு பொரிந்ததும், கீழே இறக்கி வைக்கவும்.
6. பொறித்து எடுத்த ஜாங்கிரியை, சர்க்கரைப் பாகில் நன்கு ஊற வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.