பால் அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பால் - 2 கப்
2. சர்க்கரை - 1½ கப்
3. முந்திரி - 6 எண்ணம்
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்புகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஏலக்காயை மின் அரவை எந்திரத்தில் நன்கு தூளாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்கு சுண்டக் காயும் வரை கிண்டி விட வேண்டும்.
4. பாலை அடிக்கடி அடுப்பில் இருந்து இறக்கி, இரண்டு நிமிடம் கழித்து கிளறி விட்டு, மீண்டும் அடுப்பில் குறைந்த நெருப்பில் வைத்தால் சீக்கிரம் திரண்ட பதத்திற்கு வரும்.
5. பால் ஓரளவு திரண்டதும், சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு சுண்டக் காய்ச்சவும்.
6. பாலானது கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, அடுப்பை அணைத்து நன்கு கிளறி விடவும்.
7. கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி, பின்னர் இறக்கிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.