கும்மாயம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. உளுந்து - 150 கிராம்
2. பச்சரிசி - 100 கிராம்
3. பயத்தம் பருப்பு - 50 கிராம்
4. நெய் - 150 கிராம்
5. கருப்பட்டி - 150 கிராம்
செய்முறை:
1. உளுந்து, பயத்தம் பருப்பு, பச்சரிசி மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைக்கவும்.
2. வறுத்தவற்றை ஒன்றாக மின் அரவையில் (மிக்ஸியில்) போட்டுப் பொடி செய்து சலித்து வைக்கவும்.
3. வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், சலித்த மாவைப் போட்டு வறுக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
5. வடிகட்டிய தண்ணீரை மீண்டும் அதேப் பாத்திரத்தில் ஊற்றிப் பாகு காய்ச்சவும்.
6. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் மாவை தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
7. கரைத்து வைத்திருக்கும் மாவைக் கொதிக்கும் வெல்லப் பாகில் சேர்த்துக் கிண்டவும்.
8. கிண்டும் போது, இடையில் நெய் சேர்த்துக் கிண்டவும்.
9. மாவு நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: முந்திரிப் பருப்பு தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.