பாசந்தி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பால் – 1 லிட்டர்
2. சர்க்கரை – 200 கிராம்
3. பிஸ்தா பருப்பு – 5 எண்ணம்
4. பாதாம் பருப்பு – 5 எண்ணம்
5. குங்குமப் பூ – 1/2 தேக்கரண்டி
6. ஏலத்தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. அடி கனமான பாத்திரத்தை எடுத்து, பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
2. பால் கொதித்து ஆடை படிய ஆரம்பிக்கும். ஆடை படியும் பொழுது, ஒரு முள் கரண்டியைக் கொண்டு, படிந்திருக்கும் ஆடையைப் பாத்திரத்தின் ஓரத்தில் நகர்த்தி விட்டுக் கொள்ளவும்.
3. பால் முழுவதும் கொதித்து, ஏழில் ஒரு பாகம் சுண்டும் அளவுக்கு ஆடை படியப்படிய, ஓரத்தில் ஒதுக்கி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
4. அதன் பிறகு, சர்க்கரை, ஏலத்தூள், குங்குமப்பூ இவற்றைப் போட்டு அணைத்து விடவும்.
5. ஆறிய பின், பால் அளவுக்கு பாத்திரத்தில் படிந்திருக்கும் அல்லது ஒட்டிக் கொண்டிருக்கும் ஆடை நன்கு கரண்டி எடுத்து, ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் ஆடையைக் கத்தியால் கீறிவிட்டு நன்கு கலக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.