இனிப்பு அவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கோப்பை
2. வெல்லம் - 3/4 கோப்பை
3. துருவிய தேங்காய் - 1/2 கோப்பை
4. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
5. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
6. நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
2. வறுத்த முந்திரிப்பருப்பைத் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
3. அதேக் கடாயில் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரைய விடவும்.
4. பிறகு, தூசி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து வடிகட்டவும்.
5. பிறகு ஒரு பாத்திரத்தில் அவலைப் போடவும்.
6. அவலுடன் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றிக் கலந்து விடவும்.
7. அதன் கூடவே துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள், வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு போட்டு நன்றாகக் கிளறி விட்டுச் சுடச்சுடப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.