தூத் பேடா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சீவிய பாதாம் அல்லது பிஸ்தா- 1கப்
2. பால்-1 லிட்டர்
3. சர்க்கரை-1/2 கப்
4. வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
5. கார்ன்பிளவர் மாவு- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
2. பாதியளவு பால் வற்றியவுடன் அதில் தண்ணீர் கரைத்த கார்ன் பிளவர், சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறி இறக்குங்கள்.
3. இக்கலவையை மசித்துக் கொண்டு நன்கு ஆற விடுங்கள்.
4. தேவையான வடிவத்தில் பேடாக்கள் செய்து அதன் மேல் ஏலக்காய் துள், சீவிய பாதாமால் அலங்கரிக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.