கேரட் லட்டு
சித்ரகலா செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கேரட் துருவல் – 1 கோப்பை
2. துருவிய பனீர் – 1/2 கோப்பை
3. சர்க்கரை – 1 கோப்பை
4. ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
5. முந்திரிப் பருப்பு - 8 எண்ணம்
6. உலர் திராட்சை – 8 எண்ணம்
7. நெய் – 4 தேக்கரண்டி
செய்முறை:
1. நெய்யில் கேரட் துருவலை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
2. அதில் சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
3. துருவிய பனீரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்து நீக்கி விட்டு, கேரட் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
4. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பை இலேசாக வறுத்து எடுக்கவும்.
5. வறுத்த முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்து லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: இந்த லட்டை மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.