பப்பாளி அல்வா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. பப்பாளி - 1 எண்ணம்
2. சர்க்கரை - 1 கோப்பை
3. நெய் - 4 கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பப்பாளி பழங்களை நறுக்கி, தோல் மற்றும் விதையிருப்பின் நீக்கித் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2. பப்பாளிப் பழத் துண்டுகளை விழுதாக அரைக்கவும்.
3. வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்புகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4. அதே வாணலியில் அரைத்த பப்பாளிப் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
5. அல்வா பதம் வரும் போது மேலும் நெய் விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.