ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி - 1/2 கோப்பை
2. பீட்ரூட் துருவல் - 1/2 கோப்பை
3. சர்க்கரை - 1/2 கோப்பை
4. பால் - 1/4 கோப்பை
5. நெய் - 6 மேசைக்கரண்டி
6. வெள்ளரி விதை - 1 மேசைக்கரண்டி
7. கருப்புத் திராட்சை - 2 மேசைக்கரண்டி
8. பாதாம் துருவல் - 2 மேசைக்கரண்டி
9. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வாணலியில் நெய் சேர்த்துக் காய்ந்ததும், அதில் பீட்ரூட் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. வறுத்த பீட்ரூட்டை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
3. அதே வாணலியில் பாதாம் துருவல்,வெள்ளரி விதை, கருப்புத் திராட்சை சேர்த்து வறுத்து வைக்கவும்.
4. ஜவ்வரிசியில் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பின்பு அதில் பால் சேர்த்துக் கலந்து விடவும்.
5. பாதி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
6. அத்துடன் வறுத்து வைத்துள்ள பீட்ரூட் சேர்த்துக் கலந்து விடவும்.
7. அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
8. அல்வா கெட்டியாகி, ஓரம் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும், வறுத்து வைத்துள்ள பாதாம் துருவல், வெள்ளரி விதை, கருப்பு திராட்சை எல்லாம் சேர்த்துக் கலந்து விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.