மாம்பழக் கேசரி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் - 1 எண்ணம்
2. ரவை - 1 கோப்பை
3. பால் - 1 கோப்பை
4. சர்க்கரை - 1 கோப்பை
5. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
6. முந்திரிப்பருப்பு - 15 எண்ணம்
7. பாதாம்பருப்பு - 6 எண்ணம்
8. உலர்திராட்சை - 10 எண்ணம்
9. நெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
2. பின்னர் அதேக் கடாயில், ரவையை வறுத்து எடுக்கவும்.
3. மாம்பழத் தோலை நீக்கி விட்டு பழத்தை மிக்ஸியில் அரைக்கவும்.
4. கடாயில் பால் தண்ணீர் இரண்டையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. அதில் ரவையைச் சேர்த்துக் கிளறி வேக விடவும்.
6. ரவை வெந்தவுடன் சர்க்கரை உணவு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும்.
7. அதனுடன், ஏலக்காய்த் தூள் மற்றும் மாம்பழக் கூழ் சேர்த்துக் கிளறவும்.
8. அதில், வறுத்த முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, உலர்திராட்சை மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.