கோதுமை அப்பம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 200 கிராம்
2. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
3. கனிந்த வாழைப்பழம் - 1 எண்ணம்
4. ஏலத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. வெல்லத்தூள் - 200 கிராம்
6. எண்ணெய் - 200 மி.லி.
செய்முறை:
1. வாழைப்பழத்தை தோலுரித்து விட்டு நன்றாக மசிக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு, அரிசி மாவு, ஏலத்தூள் போன்றவைகளைச் சேர்க்கவும்.
3. தனியே ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு போன்று காய்ச்சவும்.
4. வெல்லப் பாகினை மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய்யினை ஊற்றிக் கொதிக்கவும், அதில் மாவைக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
6. மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.