ரவா லட்டு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 200 கிராம்
2. சர்க்கரை - 200 கிராம்
3. ஏலக்காய் - 3 எண்ணம்
4. நெய் - 100 மி.லி
5. பால் - 100 மி.லி.
6. முந்திரிப் பருப்பு - 15 எண்ணங்கள்
7. கிஸ்மிஸ் பழம் - 15 எண்ணங்கள்
8. தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் ரவையைப் போட்டு இலேசாக வறுக்கவும்.
2. சர்க்கரையை இலேசாக வறுக்கவும்.
3. வாணலியில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், கிஸ்மிஸ்பழம், முந்திரிப் பருப்பு போன்றவற்றை இலேசாக வறுக்கவும்.
4. ஏலக்காய்த் தூள் செய்து கொள்ளவும்.
5. பாலைக் கொதிக்க வைத்து ஆறவைக்கவும்.
6. வறுத்து வைத்த ரவை, சீனியுடன் ஏலக்காய்த்தூள், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு சேர்த்து அதில் ஆற வைத்த பாலைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கரண்டி கொண்டு கிளறவும்.
7. ஒன்று சேர்ந்த கலவையை இலேசான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்துத் தனித்தட்டில் வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.