மைதா முறுக்கு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு – 400 கிராம்
2. அரிசி மாவு – 200 கிராம்
3. எள் – 1 மேசைக் கரண்டி
4. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
5. டால்டா – 1 மேசைக்கரண்டி
6. உப்பு – தேவையான அளவு
7. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மைதாவை துணியில் கட்டி இட்லிச் சட்டியில் வைத்து இட்லி போல் ஆவியில் வேக விடவும்.
2. மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இட்டு ஒரு கரண்டியால் உடைத்து விடவும்.
3. மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், அரிசி மாவு, டால்டா சேர்த்து பிசையவும்.
4. தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து விரல் நுனிகளால் ரவை மாதிரி உதிர்த்துப் பிசையவும்.
5. கைகளில் ஒட்டாதவாறு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
6. முறுக்கு உலக்கில் ஒரு கண் அச்சு போட்டு அதில் மாவை வைத்து முறுக்கு போல் பிழியவும்.
7. வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிழிந்த முறுக்குகளைப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.