கடலை உருண்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வறு கடலை - 200 கிராம்
2. சர்க்கரை - 200 கிராம்
3. நெய் - 50 மி.லி.
4. முந்திரி பருப்பு - 5 எண்ணம்
5. ஏலத்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. வறு கடலை, சர்க்கரையை நன்றாகப் பொடிக்கவும்.
2. வாணலியில் சிறிது நெய்யை விட்டுச் சூடானதும் முந்திரியைப் பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
3. மீதமுள்ளா நெய்யில் வறு கடலை மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. நல்ல வாசனை வரும்போது எடுத்து அதில் முந்திரி சேர்க்கவும்.
5. இலேசான சூட்டிலிருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.