காளான் பக்கோடா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 150 கிராம்
2. வெங்காயம் - 50 கிராம்
3. முட்டைக்கோஸ் - 50 கிராம்
4. மிளகாய் - 4 எண்ணம்
5. கடலைமாவு - 100 கிராம்
6. மசாலாத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவைக்கேற்ப
9. மல்லித் தழை - சிறிது.
செய்முறை:
1. காளான், வெங்காயம், முட்டைக்கோஸ், மல்லித்தழை, மிளகாய் ஆகியவற்றைச் சிறுதுண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. வெட்டி வைத்தவைகளுடன் கடலை மாவு, உப்பு, மசாலாத்தூள் கலந்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிடித்து வைத்திருக்கும் சிறு உருண்டைகளைப் போட்டுச் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.