மங்களூர் போண்டா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மைதாமாவு - 2 கப்
2. அரிசிமாவு - 1/2 கப்
3. தயிர் - 1 1/2 கப்
4. சீரகம் - 1 டீஸ்பூன்
5. பச்சைமிளகாய் - 5 எண்ணம்
6. இஞ்சி - சிறிது
7. சமையல் சோடா - 1 சிட்டிகை
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணைய் - தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சி, பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தயிர், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், சமையல் சோடா, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
3. பின்னர் அதில் மைதாமாவைப் போட்டுக் கிளறவும்.
4. மைதாமாவு சேர்த்த கலவை கெட்டியாக வரும் போது அத்துடன் அரிசிமாவை சேர்க்கவேண்டும்.
5. மாவைக் கெட்டியாக பிசைந்து, அந்தமாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றி, நன்கு காய்ந்ததும், மிதமான வெப்பத்தில் மாவு உருண்டைகளைப் போட்டு பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.