பப்பாளி அல்வா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பப்பாளி விழுது – 1 கோப்பை
2. சர்க்கரை – 1/2 கோப்பை ((விழுதுவின் அளவில் பாதியளவு சர்க்கரை தேவைப்படும். இனிப்பு குறைவாக விரும்புபவர்கள் குறைத்துக் கொள்ளலாம். பழம் அதிக இனிப்புடன் இருந்தாலும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்)
3. நெய் – 2 மேசைக்கரண்டி
4. அரிசி மாவு – 2 தேக்கரண்டி
5. ஏலக்காய் – 2 எண்ணம்
6. முந்திரிப் பருப்பு – 25 கிராம்.
செய்முறை:
1. தோல், விதைகளை நீக்கிய பப்பாளிப்பழத்தை விழுதாக அரைக்கவும்.
2. பப்பாளி விழுதுடன் ஏலக்காயைப் பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்.
3. முந்திரியை நெய்யில் வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
4. அரிசி மாவையும் லேசாக வறுத்து சிறிது நீர் கலந்து வைக்கவும்.
5. பப்பாளி விழுதை அடுப்பில் வைத்து கிளறவும். சிறிது பச்சை வாசம் குறையும் போது சர்க்கரை, கரைத்த மாவுக் கலவை சேர்த்துக் கலக்கவும்.
6. விழுது நீர்த்துக் கெட்டியாகத் தொடங்கும் போது ஏலக்காய், நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போன்றவைகளைச் சேர்த்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.