அரிசி முறுக்கு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 200 கிராம்
2. பச்சரிசி - 800 கிராம்
3. உளுந்தம் பருப்பு - 200 கிராம்
4. எள் - 20 கிராம்
5. சீரகம் - 30 கிராம்
6. நெய் அல்லது டால்டா - 250 கிராம்
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1.புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும்.
4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவத்தில் பிசைந்து கொள்ளவும்.
5. முறுக்குக் குழலில் தேவையான அச்சுக்களைப் பயன்படுத்திப் பிழிந்து எடுத்து வாணலியில் காய வைத்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகச் சுடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.