தேங்காய் லட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்த் துருவல் (உலர்ந்தது) - 6 கோப்பை
2. சர்க்கரை - 4 கோப்பை
3. முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
4. பால் - 2 கோப்பை.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
2. பால் நன்கு கொதித்ததும், அதில் தேங்காய்த்துருவல் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
3. அதன் பிறகு, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் பாலை உறிஞ்சும் வரை கிளறிக் கொண்டே இறக்க வேண்டும்.
4. கலவை பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வரும் போது இறக்கிச் சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
5. கலவை வெதுவெதுப்பாக ஆனவுடன், அதனை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
6. உருண்டையின் நடுவில் முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரித்து நன்கு குளிர வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.