மிளகு அவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கெட்டியான அவல் - 2 கோப்பை
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
6. துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. அவலை நன்கு தண்ணீரில் அலசி 10 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும்.
2. ஊறிய அவலை உப்புடன் சேர்த்துப் பிரட்டவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. அத்துடன் ஊறவைத்த அவலைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சில நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். (இடையில் ஓரிரு முறை கிளறி விடவும்).
5. பொடித்த சீரகம், மிளகுக் கலவை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.