மசாலா வேர்க்கடலை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வேர்க்கடலைப் பருப்பு - 250 கிராம்
2. கடலை மாவு - 150 கிராம்
3. அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
4. பூண்டு - 5 பற்கள்
5. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
6. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வேர்க்கடலைப் பருப்பை இலேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
2. பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை சிறிது நீரில் போட்டு 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் அதனை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள மிளகாய் வற்றல் பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
4. பின்பு அதில் வேர்க்கடலைப்பருப்பைச் சேர்த்து சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
5. ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள வேர்க்கடலைப்பருப்புக் கலவையைச் சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.