கிராமத்து முறுக்கு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கிலோ
2. உளுந்தம் பருப்பு - 100 கிராம்
3. எள்ளு - 25 கிராம்
4. எண்ணெய் - 500 மி.லி.
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உளுந்தம் பருப்பை வறுத்துப் பொடித்துச் சலிக்கவும்.
2. பச்சரிசியை மாவாக்கி அதனுடன் உளுந்த மாவு எள்ளு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
3. பிசைந்து வைத்த மாவை முறுக்கு அச்சில் பிழிந்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் பிழிந்து வைத்த முறுக்கைப் போடவும்.
5. முறுக்கு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.