இனிப்பு மைதா போண்டா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 100 கிராம்
2. பாசிப்பருப்பு - 250 கிராம்
3. வெல்லம் - 150 கிராம்
4. ஏலக்காய் - 5 எண்ணம்
5. சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
6. மஞ்சள் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.பாசிப் பருப்பை நன்றாக வேகவைத்த பின், அதில் வெல்லப்பாகு, ஏலக்காய், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
2. கிளறிவைத்த பாசிப்பருப்பை சிறிய உருண்டைகளாக்கவும்.
3. மைதாவில் சிறிதளவு உப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து மாவாகப் பிசையவும்.
4. வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்தவுடன் பாசிப்பருப்பு உருண்டைகளை மைதா மாவில் நன்றாக முக்கி எடுத்து எண்ணெய்யில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.