கருப்பட்டி முறுக்கு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு – 5 கப்
2. வறுத்த உளுந்து மாவு – 1 1/2 கப்
3. எள் – 2 மேசைக்கரண்டி
4. நெய் – 2 மேசைக்கரண்டி
5. கருப்பட்டி – 2 எண்ணம்
6. எண்ணெய் – தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
2. கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
3. அதில் மாவுக் கலவையை கொட்டிக் கிளறவும்.
4. ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும்.
6. பிழிந்த முறுக்கு நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.