செட்டிநாடு சீப்பு சீடை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 4 கப்br>
2. உளுந்து மாவு - 1 1/2 கப்br>
3. தேங்காய் - 1 எண்ணம்br>
4. எண்ணெய் - தேவையான அளவுbr>
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசி மாவை இலேசாக சூடு வரும் வரை வறுத்து வைக்கவும்.br>
2. தேங்காயைத் துருவி தண்ணீர் சேர்த்து அரைத்துப் பாலெடுத்து வைக்கவும்.br>
3. பச்சரிசி மாவுடன் உளுந்து மாவினைக் கலந்து அதில் உப்பு போட்டுத் தேங்காய்ப்பால் ஊற்றி முறுக்கு மாவுப் பதத்திற்குப் பிசையவும். br>
4. பிசைந்த மாவை சீப்பு சீடை அச்சில் பிழிந்து வைக்கவும்.br>
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிழிந்து வைத்த மாவைக் கத்தியால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.