மைதா பால் பர்பி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 1 கப்
2. பால் - 1 லிட்டர்
3. சர்க்கரை - 3 1/2 கப்
4. நெய் - 3/4 கப்
5. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்து வைக்கவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், மைதா மாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும்.
3. வறுத்த மாவைக் கீழே இறக்கிச் சிறிது நேரம் ஆறவிடவும்.
4. இதனுடன் கோவாவைக் கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
5. வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் கம்பிப் பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
6. ஆறிய பின்பு இக்கலவையை மேலும் கொஞ்சம் கிளறி விடவும்.
7. இக்கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டிப் பரவலாக்கி, தேவையான அளவுகளில் துண்டுகள் போட்டுப் பயன்படுத்தலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.