பலாப்பழ அல்வா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பலாச்சுளை - 10 எண்ணம்
2. வெல்லம் (பொடித்தது) - 1 கப்
3. சுக்குத் தூள் - 1 சிட்டிகை.
செய்முறை:
1. கொட்டை நீக்கப்பட்ட பலாச்சுளையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் தண்ணீர் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.
2. வேக வைக்கப்பட்ட பலாச்சுளை ஆறியதும், அதை விழுதாக அரைத்தெடுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் பலாச்சுளையின் விழுது எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சமமான அளவில் வெல்லத்தூளுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும் அதை வடிகட்டவும்.
5. அடி கனமான வாணலியில் வடிகட்டிய வெல்லப்பாகை விட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதையும் சேர்த்து, மிதமான நெருப்பில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
6. வெல்லப் பாகும், பலாச்சுளை விழுதும் நன்றாகச் சேர்ந்து, கெட்டியாக சுருண்டு வரும் வரைக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
7. கடைசியாக சுக்குப்பொடியைத் தூவி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.